Connect with us

உள்நாட்டு செய்தி

செப்டேம்பர் முடியும் போது 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி:ஜனாதிபதி

Published

on

செப்டேம்பர் முடியும் போது 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

“உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த தடுப்பூசிகளை மாத்திரமே பாவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 44 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. சனத் தொகையில் 3 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் சைனோபாம் மற்றும் சைனோ வெக் தடுப்பூசிகள் கிடைக்கும். அதேபோல் ஸ்புட்னிக் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டேம்பர் முடியும் போது 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். எனவே எவ்வாறான சவால்கள் வந்தாலும் நாட்டு மக்களின் எதிர்ப்பார்பை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்.

எவராலும் ஒழிக்க முடியாது என கூறிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் அது போன்றே நாட்டு மக்களை பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு சௌபாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்க என்னை அர்ப்பணிக்கின்றேன். அனைத்தையும் திட்டமிடலுடனேயே செய்து வருகின்றேன். பாஸ்கு தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு இயந்திரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்ததை மக்கள் அறிவர். கடந்த அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. கடந்த அரசாங்க காலத்தில் மறக்கடிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

பாதாள உலக பிரச்சினையை நாம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம். போதை பொருள் பாவனையும் ஒரளவு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை;து இனத்தவரும் சமாதானத்துடன் வாழ வழி செய்ய குறுகிய காலத்தில் முடிந்துள்ளது. மக்களுக்கு இனிமேலும் ஒன்றுப்பட்ட நாடு தொடர்பில் பிரச்சினை எழ தேவையில்லை. நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட எவருக்கும் எந்தவகையிலும் இடமளிக்கப்படாது. தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் முதலிடம் வழங்கும்.

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை உரிய வகையில் மீளச் செலுத்த முடியாது என எதிர்க்கட்சிகள் கூறின.எனினும் நாம் அவற்றை கிரமாக செலுத்துகின்றோம். இராசயன உர பாவனை மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு கட்டாயம் தீர்வு அவசியம். அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுத்து மகிழ்ச்சியான குடும்பம் என்ற எண்ணக்கருவை நிறைவேற்றுவோம். 65,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும்.” என்றார்.