Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி தேவை

Published

on

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விசேட கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி்ப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர், இராணுவ உயரதிகாரிகள், பொலிசார், நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊட சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் 18243 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்ர்களிற்கு தெவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இங்குகின்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள், அரச திணைக்களங்களில் கடமையாற்றும் கள நிலை உத்தியோகத்தர்க்ள, ஊடகவியலாளர்கள் என 20.000த்துக்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்க வேண்டி உள்ளது.

கி்டைக்கின்ற தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகள், பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கைகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.