உள்நாட்டு செய்தி
மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக்காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதன்படி, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாண எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதன்படி, நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்கு செம்மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தின் தும்பன, உடுநுவர மற்றும் யடிநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க கோரல, பல்லேபொல மற்றும் யடவட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவண்வெல்ல, தெரனியகலை, புலத்கோஹோபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரநாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, புலத்சிங்கள, அகலவித்த மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட மற்றும் ஹொரண ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை, கலவான பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எலப்பாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலக பிரிவிக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் வரையிலான அதிக மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்துக் காணப்படும் என்பதுடன் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.