உள்நாட்டு செய்தி
பயணத்தடை நீடிக்கப்பட்டது

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கபட்டுள்ளது.
ஆகவே, பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.