உள்நாட்டு செய்தி
கம்பளை நகரில் ஆண் ஒருவரின் சடலம்

கம்பளை நகரில் இன்று (17) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கம்பளை, உனம்புவ பகுதியில் இருந்து பசளை வாங்குவதற்காக நகரத்துக்கு வந்த 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் இருந்து குறித்த நபர் இறங்கும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. அவ்விடத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் ஏதேனும் நோயால் வீதியில் விழுந்து மரணித்தாரா அல்லது எவ்வாறு உயிரிழந்தார் என்பது இன்னும் தெரியவரவில்லை.
முகத்தில் சிறு காயங்கள் இருந்துள்ளன. எனவே, சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.