உள்நாட்டு செய்தி
11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

மூன்று மாவட்டங்களின் 11 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (13) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அந்தவகையில், கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலுகஹவெல 91 B கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் அஹங்கம பொலிஸ் பிரிவின் கீழுள்ள கரந்துன்கொட 161 A, கோவியபான 156 A, கஹவத்தகம 164 E, தொம்மன்கொட 160 A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தின் ஹபரதுவ பொலிஸ் பிரிவின் லணுமோதர 151 D, பொனவிஸ்டா 137 C, கட்டுகுருந்தை 144 C ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவைதவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் பல்மடுல்ல பொலிஸ் பிரிவின் தெனவக்க பாத்தகட 171, திப்பிட்டிகல 172 C ஆகிய கிராம சேகவர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கமுவ கிராம சேகவர் பிரிவின் நகர்ப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 3 மாவட்டங்களின் 04 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவின் உக்கல்ல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் தெஹியத்தகண்டிய கிராம சேவகர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் தோட்டத்தின் கோனகல்ல பிரிவு மற்றும் 30 ஏக்கர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.