உள்நாட்டு செய்தி
இன்று (03) முதல் ரயில்வே திணைக்களம் எடுக்கவுள்ள நடவடிக்கை…
இன்று (03) முதல் அலுவலக ரயில்கள் சிலவற்றை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தூர இடங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தூர ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பயணிகளின் கோரிக்கைக்கமைவாக வடக்கு ரெயில் சேவை சில இடம்பெறுவதாகவும் ரயில்வெ திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிலுள்ள சகல மார்க்கங்களிலும் தனியார் பஸ் போக்குவரத்தை இன்று முதல் 25 வீதமாக குறைப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.