Connect with us

உள்நாட்டு செய்தி

மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Published

on

நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் போல் மழை பெய்யும் போது தற்காலிமாக கடுமையான காற்றும் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை, கண்டி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை, காலி, மொனராகலை, கேகாலை, பொலன்னறுவை ஆகிய 17 மாவட்டங்களில் கடும் இடிமின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், இடிமின்னல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.