உள்நாட்டு செய்தி
மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.