உள்நாட்டு செய்தி
இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசி ஏற்றும் திகதி வெளியானது

ஜனவரி 29 ஆம் திகதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சினி பெர்னாண்டேர் புள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்காக தடுப்பூசி தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.