உள்நாட்டு செய்தி
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
மேல் மாகாணத்தில் டெங்கு பரவுவதை ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ள தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் 3 நாட்களுக்கு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4000ற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் டெங்கு நோயினால் மூவர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணி;ப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் மழையுடன் கூடிய காலநிலையும் டெங்கு பரவலுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் தமது சுற்றுச்சூழலை நுளம்பு பெருகாத வகையில் வைத்திருப்பது கட்டாயம் என்றும் சுகாதார தரப்பினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.