உள்நாட்டு செய்தி
நஞ்சு களஞ்சியப்படுத்தப்பட்ட கொள்கலனில் தேங்காய் எண்ணெய் – வர்த்தகருக்கு அபராதம்
நச்சுப்பொருள் களஞ்சியப்படுத்தப்படும் இரும்பு கொள்கலனுக்குள் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட வர்த்தகர் ஒருவருக்கு 60,000 ரூபா அபராதத்தை மாளிகாகந்த நீதவான் கோஷல சேனாதீர விதித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெயை அழிக்குமாறு கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறுமாயின் வர்த்தக நிலையத்திற்கு தடை விதிக்கப்படும் என நீதவான் எச்சரித்துள்ளார்.
கொழும்பு 13 ஆட்டுப்பட்டித்தெரு பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.