உள்நாட்டு செய்தி
தேய்ந்த டயர்கள் தொடர்பான விசேட நடவடிக்கை இடைநிறுத்தம்
தேய்ந்த டயர்களை அடையாளம் காணும் விசேட கண்காணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் சந்தையில் காணப்படும் டயர்கள் பற்றாக்குறை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தேய்ந்த டயர்களை மாற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதை தொடர்ந்து டயர் விற்பனை நிலையங்களில் டயர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே போதுமான டயர்கள் வியாபார நிலையங்களை வந்தடைந்ததும் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கையை மீள ஆரம்பிக்குமாறு அகில இலங்கை சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களின் தேசிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.