உள்நாட்டு செய்தி
ஸ்புட்னிக் வீ கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வீ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் அவரசர கால நிலையின் போது ஸ்புட்னிக் வீயை பயன்படுத்த ஒளடதங்கள் அதிகார சபை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.