உள்நாட்டு செய்தி
2016 மார்ச் முறிகள் மோசடி தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

2019 மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறிகள் மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்கு தலா மூவரடங்கிய இரண்டு நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டன.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் மேலும் 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்காக இந்த குழாம் நியமிக்கப்பட்டது.
தமித் தொட்டவத்த மஞ்சுள திலகரட்ன மற்றும் எம். இஸடீன் ஆகியோர் முதலாவது மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தில் உள்ளடங்குகின்றனர்.
அமல் ரணராஜா நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகியோர் இரண்டாவது நீதிபதிகள் குழாத்தில் அடங்கின்றனர்.