உள்நாட்டு செய்தி
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் மொத்தமாக 291 பேர் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றால் இன்றைய தினம் ஐவர் உயிரிழந்துள்ளனர்.மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை Covid-19 வைரஸ் (B.1.351) தொற்றுக்குள்ளான ஒருவர் முதல் தடவையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை
நிர்பீடணம் ,உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
தான்சானியாவிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரே புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.