உள்நாட்டு செய்தி
பட்டாசுகளின் தரம் குறித்து ஆராய வேண்டும் – கண் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
பட்டாசுகளின் தரம் குறித்து ஆராயுமாறு கண் மருத்துவர்கள் சங்கம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் நேற்று (08) கோரிக்கை விடுத்துள்ளது.சிங்கள தமிழ் புத்தாண்டின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கண்சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் குசும் ரத்நாயக்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.மற்ற நாடுகளில் பட்டாசு அல்லது வெடிபொருட்களில் அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் , அதில் என்ன இருக்கிறது என்ற லேபிள் இருக்கும். ஆனால் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பட்டாசுகளில் இந்த விபரம் காணப்படவில்லை என்கிறார்.இந்நிலைமையினால் பலர் பட்டாசுகளை பயன்படுத்தும்போது விபத்துக்களுக்கு உள்ளாகி வருகின்றனர் . எனவே, பட்டாசு மற்றும் பட்டாசுகளின் தரம் குறித்து தர நிர்ணய நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.