உள்நாட்டு செய்தி
மஸ்கெலியாவில் மாணவன் உயிரிழந்த சம்பவம் : சந்தேகநபர்கள் விளக்கமறியலில் !
ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேநகபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் எம்.ஃபரூக்டீன் உத்தரவிட்டுள்ளார்.மஸ்கெலிய – காட்மோரிலுள்ள பாடசாலை வளாகத்திற்குள் அனுமதியின்றி கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கொங்ரீட் வளையம் சரிந்து 11 வயதான மாணவன் உயிரிழந்ததுடன், சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.காட்மோரிலுள்ள பாடசாலையொன்றில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட கொங்ரீட் வளையம் சரிந்ததில் அதற்குள் சிக்கி நேற்று முன்தினம் (04) மாணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மஸ்கெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.