உள்நாட்டு செய்தி
கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது 18 கிலோ 470 கிராம் கஞ்சா குறித்த சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் காவவில் உள்ள நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.