உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி திருவிழா!
தேசிய புத்தரிசி விழா இன்று (06) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது.பாரம்பரியமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரதன தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அடமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், தங்கப் பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்ப ஆரம்பித்ததுடன், மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்துக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதியும் கலந்துகொண்டார்.