உள்நாட்டு செய்தி
பண்டிகைகளைக் கருத்திற் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை ரூ. 36 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
பண்டிகைகளைக் கருத்திற் கொண்டு, முட்டை உள்ளிட்ட 9 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, (1kg)
– பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) – ரூ. 495 (ரூ. 55 கழிவு)
– சின்ன வெங்காயம் (இறக்குமதி – ரூ. 290 (ரூ. 30 கழிவு)
– கடலை (ஜம்போ) – ரூ. 494 (ரூ. 16 கழிவு)
– உருளைக் கிழங்கு (பாகிஸ்தான்) – ரூ. 195 (ரூ. 15 கழிவு)
– LSL பால் மா (400g) – ரூ. 925 (ரூ. 10 கழிவு)
– கோதுமை மா – ரூ. 192 (ரூ. 8 கழிவு)
– முட்டை (இறக்குமதி) – ரூ. 36 (ரூ. 7 கழிவு)
– வெள்ளைப் பச்சரிசி – ரூ. 192 (ரூ. 3 கழிவு)
– சோயா மீற் – ரூ. 593 (ரூ. 2 கழிவு)
இதேவேளை, பண்டிகையையிட்டு ரூ. 4,500 பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை ரூ. 3,420 எனும் தள்ளுபடி விலையில் பொது மக்கள் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக, சதொச நிறுவனத் தலைவர் பசந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.