உள்நாட்டு செய்தி
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் வீரவன்ச விடுவிப்பு..!
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று ( 01) வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, குடிவரவுச் சட்டத்தை மீறிச் செயலற்ற கடவுச்சீட்டுடன், வெளிநாடு செல்ல முயற்சித்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.