உள்நாட்டு செய்தி
மீரியபெத்த பகுதியில் நிலச்சரிவு அபாயம்
கொஸ்லந்த மீரியபெத்த பட்டாவத்த பகுதியில் இன்று (27) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.பட்டாவத்த தோட்டத்தின் 14 மற்றும் 15 ஆம் லயன் வீடுகளின் மேல் பகுதிகளில் மண்சரிவு காணப்படுவதாகவும், இது தொடர்பில் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.‘தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும் வரை இது குறித்து எதுவும் கூற முடியாது. ஏதேனும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், விரைவான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்துகிறோம்’’ என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.உதய குமார தெரிவித்தார்