உள்நாட்டு செய்தி
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமைச்சரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கேம்கள் உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை பேஸ்புக் பக்கம் சைபர் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.சைபர் தாக்குதல் குறித்து அமைச்சர் குழுவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.