உள்நாட்டு செய்தி
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு
கடந்த வாரத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 6.6 சதவீதத்தினால் வலுவடைந்துள்ளது.அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகராக 14.2 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்ட்ஸிற்கு நிகராக 7.3 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 6.7 சதவீதமும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.