Connect with us

உள்நாட்டு செய்தி

“திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி அனுஸ்டிக்கப்படும் விதம்”

Published

on

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற உள்ளதோடு, ஒரே நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்தை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கள் தெரிவித்தார்.\

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று (5) காலை இடம் பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் எதிர் வரும் 11 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில், முன் ஏற்பாடுகள் தொடர்பாக இன்றைய தினம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு

“வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தர உள்ள அடியவர்கள்  வருகை தருவதை இயன்ற அளவிற்கு குறைத்து உங்கள் வீடுகளிலும்,அயலில் உள்ள ஆலயங்களுக்கு சென்று சிவராத்திரி தின நிகழ்வுகளையும், விரதங்களையும் அனுஸ்ரிக்குமாறு வேண்டுகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்கள் ஏ-32 பிரதான பாதையூடாக ஆலய வீதி ஊடாக ஆலயத்தினுள் ஒரு வழிப் பாதையூடாக சுகாதார நடைமுறைகளை பின் பற்றி வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும்.

அனைவரும் நான்கு ஜாம பூசையில் கலந்து கொள்வதை இயன்ற அளவிற்கு தவிர்த்து நீங்களாகவே ஒவ்வொரு பூசைகளிலும் தரிசித்த பின்பு வெளியேற வேண்டும். சுகாதார நடை முறை காரணமாக பாலாவியில் இருந்து தீர்த்த காவடி எடுக்கின்ற நடை முறை நிறுத்தப்பட்டுள்ளதுடன், நான்கு ஜாம பூஜைகளுடன் அன்றைய தினத்திலும்,சிவாச் சாரியர்களினால் தீர்த்தக் காவடி மகாளிங்க பெருமானுக்கு நடாத்தப்படும்”.என அவர் மேலும் தெரிவித்தார்.