உள்நாட்டு செய்தி
தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்…!
இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார்.
சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை காணப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
சிறு பிள்ளைகள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது எனவும் தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் இந்திரா கஹ்விட்ட தெரிவித்துள்ளார்.
அதன்படி, தோலில் வெள்ளைப் புள்ளிகள், தோல் அரிப்பு, வியர்வை கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.
குறிப்பாக பூஞ்சை தொற்று ஏற்பட்டால் மருந்தகத்திற்கு சென்று மருந்துகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளித்தால், பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எனவும் சரியான சிகிச்சை பெற முடியாமல் போகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
குழந்தைகள் சூரியனுக்கு பழக வேண்டும் என்ற கருத்தை தவிர்த்து இந்த கடினமான சூழலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.