உள்நாட்டு செய்தி
மரக்கறி விலை மேலும் குறைவு..!
மரக்கறிகளின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளதாக கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களாக மரக்கறிகளின் விலை 500 முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது பெரும்பாலான மரக்கறிகளின் விலை 200 ரூபாவிற்கும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், சிங்கள புத்தாண்டு காலத்திலும் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது முள்ளங்கியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு, கூலி போன்றவற்றால் விவசாய செய்கைக்கு செலவழித்த பணத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அரசு தலையிட்டு, இரசாயன உரம் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலையை குறைத்தால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை பின்வருமாறு.
போஞ்சி ரூ.150 – 170, முட்டை கோவா ரூ.280 – 250, தக்காளி ரூ.200 – 240, கத்தரிக்காய் ரூ.180 – 150, கரட் ரூ.280 – 250, பீட்ரூட் ரூ.200 – 250, பச்சை மிளகாய் ரூ.250 – 240, மிளகாய் ரூ.50 – 240 , முள்ளங்கி ரூ.50 – 20, லீக்ஸ் ரூ.180 – 160, நோகோல் ரூ.150 – 120 வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.