உள்நாட்டு செய்தி
காட்டு யானை தாக்கியதில் சுற்றுலா பயணி பலி
பொத்துவில், மணச்சேனை, கொமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று உயிரிழந்துள்ளார்.இத்தாலிய சுற்றுலாப் பயணி ஜிஞ்சினோ பாலோ (50), மற்றுமொரு இத்தாலிய சுற்றுலாப் பயணியுடன் கொமரியா பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த போது தாக்குதலுக்கு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.காயமடைந்தவர்கள் 1990 அம்புலன்ஸ் சேவையின் மூலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் வெஹித தேவபியவின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் செனவிரத்ன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.