Connect with us

உள்நாட்டு செய்தி

வெளிநாடுகளில் உள்ள 600 இலங்கையர்களை அழைத்துவர விசேட நடவடிக்கை

Published

on

நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் உள்ள 600 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெப்போதும் இல்லாத வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்திலும், தூதுவர் மட்டத்திலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருவதுடன், கலந்துரையாடல்கள் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு குற்றவாளிகளும் துபாய் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில் நாட்டில் பாதுகாப்பு வலையமைப்பை நிலைநிறுத்துவதற்குப் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலர் இந்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மிக இலகுவாக துபாய் மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதனால் அவர்கள் அந்த நாடுகளுக்குள் நுழைவதைத் தடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *