உள்நாட்டு செய்தி
வட மாகாண பிரதம செயலாளர் விரைவில் நியமனம்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றும் எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்
இந்நிலையில், தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளராகவுள்ள சமன் பந்துலசேனா கொழும்புக்கு மாற்றப்படவுள்ளார்.