உலகம்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

ஊழல் குற்றத்திற்காக, பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
தமது அரசியல் கட்சிக்கு எதிரான குற்றவியல் வழக்கு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, நீதவான் ஒருவருக்கு மொனாக்கோவில் உயர்தகைமை பதிவி ஒன்றை வழங்க முயற்சித்ததன் ஊடாக, கையூட்டு வழங்கும் குற்றச்சாட்டில் 66 வயதான சர்கோஸி குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டிருந்தார்.
இதே குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ள குறித்த நீதவான் மற்றும் சர்கோஸியின் முன்னாள் சட்டத்தரணி ஆகியோருக்கும் அதே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறைத்தண்டனைக் காலத்தை முன்னாள் ஜனாதிபதி சர்கோஸி சிறைக்குச் செல்லாமல், கண்காணிப்பின் கீழ் வீட்டிலேயே கழிக்கலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.