உலகம்
பிரான்ஸ் மக்கள் போராட்டம்
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி சரியான ஆயுதம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள, மக்களை பல்வேறு வழிகளில் கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை முதல் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கள், பொது போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.