உள்நாட்டு செய்தி
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் திடீர் மாற்றம்: மத்திய வங்கி அறிவிப்பு
இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 0.8% சரிவை பதிவு செய்துள்ளது.
ஏற்றுமதி வருவாய்
கடந்த ஆண்டு ஜனவரியில், ஏற்றுமதி வருவாய் 978 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இந்த ஆண்டு ஜனவரியில், 971 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, விவசாய மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.