உள்நாட்டு செய்தி
வற் வரியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் : எரிபொருளுக்கு சலுகை
எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏப்ரல் மாதத்தில் அதிக சதவீதத்தினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வரி முறையில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதாகவும், 18 சதவீதமாக உள்ள வற் வரி 15 சதவீதமாக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிதி அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து திட்டங்களை தயாரித்து வருவதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த மாதம் எண்ணெய் மற்றும் மின்சார சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் தயாராக இருந்த போதிலும், ஏப்ரல் மாதத்தில் இந்த சலுகைப் பொதியுடன் அவற்றை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.