உள்நாட்டு செய்தி
கரவனெல்ல வைத்தியசாலையிலுள்ள CT ஸ்கேன் இயந்திரம் செயலிழப்பு !
கரவனெல்ல ஆதார வைத்தியசாலையிலுள்ள CT ஸ்கேன் இயந்திரம் செயலிழந்துள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாளாந்த பரிசோதனைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.ஸ்கேன் இயந்திரம் மூலம் தினமும் சுமார் 50 நோயாளிகள் பரிசோதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, களுத்துறை வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் செயலிழந்து ஒரு வருடத்திற்கும் மேலாகின்றது.கம்பஹா பொது வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாகவும் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.