உள்நாட்டு செய்தி
நாளை முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிக்கிரியைகள் !
முன்னாள் நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான ரொனி டி மெல்லின் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் மாத்தறை ருஹுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.ரொனி டி மெல்லின் கடைசி ஆசைக்கு மதிப்பளித்து, பொது மரியாதைக்காக உடலை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் கோரிக்கையை ஏற்பாட்டுக் குழு நிராகரித்தது.
ரொனி டி மெல்லின் பூதவுடல் கொழும்பிலிருந்து ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு இன்று (29) பிற்பகல் 2.00 மணியளவில் தெற்கு அதிவேக வீதியூடாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன பிரதி உபவேந்தர் பேராசிரியர் சமன் சந்தன பெரம்வீர மற்றும் ஏனைய பல்கலைக்கழக ஊழியர்கள் அங்கு உடலை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.பின்னர் ரொனி டி மெல்லின் உடல் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அஞ்சலிக்காக ருஹுனு பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள விசேட மண்டபத்தில் வைக்கப் ப்படும்.நாளை மார்ச் 1ஆம் திகதி, இறுதி ஊர்வலமாக ருஹுனு பல்கலைக்கழக மைதானத்திற்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.00 மணியளவில் பௌத்த மத சடங்குகளைத் தொடர்ந்து அடக்கம் செய்யப்படும் . ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றவுள்ளனர்.