Connect with us

உள்நாட்டு செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி தொடர்பில் செஹான் சேமசிங்கவின் தகவல்

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மார்ச் 7ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை தொடர்பான இரண்டாவது மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மார்ச் 7ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி தொடர்பான இரண்டாவது மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதன்போது சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சுமார் இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.

அத்துடன் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை நிறைவு செய்வது தொடர்பிலான மீளாய்வும் செய்யப்படும்.

இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் பணியாளர் சபையின் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.