Connect with us

Sports

“டைகர் வூட்ஸ் தப்பித்தமை ஆச்சரியம்”

Published

on

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார்.
இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது.

காரில் தனியாக பயணித்த வூட்ஸ் பலத்த காயம் அடைந்தார்.

விபத்தில் சிக்கிய டைகர் வூட்ஸ் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வூட்சில் காலில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டைகர் வூட்ஸ் தப்பியமை ஆச்சரியமானது என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகும் போது 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.