உள்நாட்டு செய்தி
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தை மாற்றுவதற்கு திட்டம்!
நாட்டில் புனர்வாழ்வு நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தை பிரிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.