உள்நாட்டு செய்தி
24 மணித்தியாலங்களில் 759 பேர் கைது-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 759 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 549 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 210 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்களில் 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 4 பேர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கைகளின்போது 135 கிராம் ஹெரோயின், 87 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 25 கிலோ கஞ்சா, 50 ஆயிரத்து 849 கஞ்சா செடிகள் மற்றும் 1,545 போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.