உள்நாட்டு செய்தி
அளுத்கமவில் வெளிநாட்டு சுற்றுலா பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு
அளுத்கம பிரதேசத்தில் மொரகல்ல கடற்பரப்பில் மூழ்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டவர் ருமேனியாவைச் சேர்ந்த 73 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.