உள்நாட்டு செய்தி
இரத்த சோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டின் போஷாக்கு மாதம் தொடர்பாக இலங்கை குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் 14.3% இலிருந்து 16.0% ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களில் அதிக வீதமானவர்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது 28.3 வீதமாகும். இரண்டாவது அதிகூடிய வீதமாக அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது 25.6% வீதமாகும்.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 26 மற்றும் 28 வாரங்களில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் சதவீதம் 22% என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை 11% ஆகவும், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை 35.6% ஆகவும் உள்ளது.
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, 15.1% ஆக உள்ளது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் அதிக சதவீதம் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இது 23.7% ஆகும்.