உள்நாட்டு செய்தி
பெலியத்த படுகொலை – பெண் உட்பட இருவர் கைது…!
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட,
05 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.