உள்நாட்டு செய்தி
ஒரு இறாத்தல் பாணின் எடை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு
ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையைக் குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனுமதிக்கப்பட்ட 13.5 கிராம் குறைபாடுடன் ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடை 450 கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரை இறாத்தல் பாணின் நிலையான எடை 225 கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விற்பனை செய்யப்படும் பாணின் எடையைக் காட்சிபடுத்தப்படுமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.