உள்நாட்டு செய்தி
இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது
ஹம்பாந்தோட்டையில் லஞ்சம் பெற்ற நிலையில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
80000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி உறுதி தொடர்பான முறைப்பாட்டாளரிடமிருந்து இந்தத் தொகை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான கிராம உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.