உள்நாட்டு செய்தி
பயணிகள் பேருந்தில் ஹெரோயின் பொதி – சாரதி கைது !
கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து 143 கிராம் ஹெரோயின் பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்தின் சாரதியில் இருக்கைக்கு அருகில் சிறிய பொதி ஒன்று இருந்துள்ளது.
அது தனது உணவு பொதி என சாரதி தெரிவித்துள்ளார். பொலிஸார் அதனை சோதனையிட்டபோது ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.