உள்நாட்டு செய்தி
இறப்பர் பட்டி கழுத்தில் இறுகி சிறுவன் பலி !
கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுடைய சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதால் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் உள்ளூர் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் தனது வீட்டில் இறப்பர் பட்டியில் இரும்பு குண்டு ஒன்றை கட்டி சுழற்றி விளையாடிக்கொண்டிருந்ததாகவும், பந்து சிறுவனின் தலையில் பட்டதாகவும், பின்னர் இறப்பர் பட்டி கழுத்தில் இறுக்கமாக சுற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.