உள்நாட்டு செய்தி
சுற்றுலா பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கிய வற் வரி அதிகரிப்பு
நாட்டில் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் சிகிரியாவைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிகிரியா சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை பார்வையிடுவதற்கு, அனுமதிச் சீட்டுக்களை டொலரில் கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது.
தற்போது, பெறுமதி சேர்வரி நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அனுமதிச் சீட்டுக்கள் ரூபாய் நாணய அலகில் மாத்திரம் வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் மோரேமட தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் சிகிரியாவைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 30 டொலர் அறவிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தத்தை செயற்படுத்தியதன் பின்னர், அந்த தொகை 36 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.