Connect with us

உள்நாட்டு செய்தி

சுகாதார நிபுணர்கள் உதவித்தொகை கோரி அடையாள வேலை நிறுத்தம்

Published

on

  

 

சிற்றூழியர் உட்பட சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய மேலும் பலர் இன்று முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை 6 மணி முதல் நாளை (12) காலை 8 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் இந்த கொடுப்பனவை வழங்குமாறு கோரி, துணை சுகாதார சேவைகளில் ஈடுபடும் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

சுகாதார அமைச்சின் செயலாளருடன் நேற்று நடத்திய கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என சித்த மருத்துவ சேவைகள் முன்னணியின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.